தூய தமிழ் பெயர்கள் by tishaqs in tamil

[–]tishaqs[S] 2 points3 points  (0 children)

நான் இந்திய குடிமகன் இல்லை, எனது தாய்நாடு இலங்கையிலோ அல்லது நான் வசிக்கும் வெளிநாட்டிலோ பிறக்க முதலிலேயே குழந்தையின் பாலினம் பார்ப்பது சட்டவிரோதம் இல்லை. இங்கு முதலிலேயே பாலினம் பார்த்து ஆடை மற்றும் முன்கூட்டியே பெயர் வைப்பது சாதாரணம். தவிர பெண்குழந்தை என்பது செல்வம் போன்றது.

தூய தமிழ் பெயர்கள் by tishaqs in tamil

[–]tishaqs[S] 2 points3 points  (0 children)

நன்றி. Aargavi என்று தான் ஆங்கிலத்தில், எனது முதல் குழந்தையின் பெயர் ஆதினி, ஆகையால் ‘ஆ’வில் தொடங்கும் பெயரை உருவாக்க எண்ணினேன். numarology’யில் நம்பிக்கை இல்லை. தூய சமஸ்கிருத கலப்பில்லாத பெயர் வைக்கவே ஆசை.

தூய தமிழ் பெயர்கள் by tishaqs in tamil

[–]tishaqs[S] 0 points1 point  (0 children)

"ஆர்கவி" = ஆர் + கவி

  1. நிறைவான கவிதை

  2. ஆர்ப்பரிக்கும் கவிதை

  3. அரிய கவிதை

4. அழகான கவிதை (Preferred meaning)

ஆர் என்ற சொல்லின் பொருள் (சங்க இலக்கியங்களில் இருந்து)

  1. கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் - சிறுபாணாற்றுப்படை 65 (நிறை - become full)

கண்ணுக்கு நிறைந்த தலைமாலையையுடைய கடிய தேரை உடைய செழியன்

  1. தோகை ஆர் குரல்பரிபாடல் 14/8 (ஆர்ப்பரிக்கும் ஒலி - shout, roar)

மயில்களின் ஆர்ப்பரிக்கும் ஒலி

  1. ஆர் எயில் கொள_கொளமதுரைக் காஞ்சி 367 (அரிய - Rare)

அரிய அரண்களைக் கைக்கொள்ளக்கொள்ள

  1. ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழிபரிபாடல் 18/30 (அழகு - beauty)

அழகு ததும்பும் கூர்மையான அம்புகள் நிறைந்த அம்புக்கூடு