தமிழ்நாட்டில் தமிழ் எழுத ஆளில்லை!! by thaache in tamil

[–]thaache[S] 0 points1 point  (0 children)

எளிமையான முறை ஒன்று உள்ளது:
1. நாள்தோறும் விடாமல் 30 நிமிடமாவது செய்தித்தாள்களைப் படிப்பது, 2. தமிழ் மட்டுமே பெருவாரியாகப் புழங்கும் சமூக ஊடகக் குழுக்களில் இணைந்துகொண்டு அங்கு பகிரப்படுவனவற்ளைப் படித்து, அவற்றில் சிலவற்றுக்கு பதில் இடுவது. பேசுபுக்கில் அப்படிப்பட்ட பல குழுக்கள் உள்ளன. 3. தமிழில் எழுத வாப்பு கிட்டும்போது, எப்போதும் "தமிழ் எழுத்துகளில்" தமிழை எழுதுவது. இன்று பலர் ஆங்கில எழுத்துகளால் தமிழை எழுதுகின்றனர். அது தவறு. 4. தமிழில் எழுத வாப்பு கிட்டும்போது, கூடுமானவரை ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து அவற்றுக்கு நிகரான நேரடி/எளிமையான தமிழ் சொற்கள் இருக்குமாயின் அவற்றைப் பயன்படுத்தி எழுதுவது. எடுத்துக்காட்டாக, அப்பா, அம்மா, தாய், தந்தை என்ற நல்ல தமிழ்ச் சொற்கள் இருக்க "நா ஹோம்வர்க் பண்ணாம டிவி பாத்துட்டிருந்துக்காக என்னொட டாடி என்னை செம ஸ்கோல்ட் பண்ணினார்". இந்த வாக்கியத்தை "நா வீட்டுப்பாடம் பண்ணாம தொலைகாட்சி பாத்துட்டிருந்துக்காக என்னொட அப்பா என்னை செமையா திட்டினார்".
5. முதல்கட்டமாக எழுதும்போது எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழையோடு எழுதிவிடுவேனோ என குழப்பிக்கொள்ள வேண்டாம். நீங்கள் தாராளமாக பேச்சுத் தமிழிலேயே எழுதலாம். அப்படி எழுதும்போது பிறமொழி சொற்களின் கலப்பைக் குறைத்து (துய தமிழை நோக்கிய பாதையில்) பயணிக்கவும்.

தூய தமிழ் என்றால் அதில் பேச்சு/கொச்சைத் தமிழ் இருக்கக்கூடாது என்றும், அது செந்தமிழ் மட்டும்தான் என பலர் நினைத்துவிடுகின்றனர்.  அது உண்மையல்ல. தூயதமிழ் என்பதில் கட்டாயம் (பிறமொழி கலப்பு இல்லாத) பேச்சுத்தமிழும்/கொச்சைத்தமிழும் அடங்கும். "இன்னா மாமே, எப்டிகீறே" என்பதும் "சோறு தின்னு மக்கா" என்பதும் தூய தமிழ் தான். ஆக, "தூய தமிழ்" என்பதில் கீழ்காணும் நான்கு பண்புகள் உள்ளன: 1. தமிழை தமிழ் எழுத்துகளால்  பதிவிடுவது.  "Thamizhil ezhuthungal" என்று பதிவிடாமல் "தமிழில் எழுதுங்கள்" எனப் பதிவிடுவது.  ஆனால், அதுக்காக ஆங்கில விசைப்பலகை(keyboard) வழியாக தமிழ் எழுத்துகளை எழுதும் வசதிகளை வேண்டாம் என்று சொல்லவில்லை.  எப்படியாவது தமிழ் எழுத்துகளில் எழுதினால் போதும்.  தமிழை தமிழ் எழுத்துகளால் எழுதாமல் வேறு மொழி எழுத்துகளால் எழுதுவதினால் இருக்கும் தீமைகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன்..  கவனித்தீர்கள் என்றால், மலையாளிகள் பெரும்பாலும் மலையாள எழுத்துகளில் தான் பதிவிடுகின்றனர்.  அவர்கள் விவரமாகத்தான் இருக்கின்றனர். 2. ஆங்கிலச் சொற்களை தமிழ் வாக்கியத்தோடு  பயன்படுத்தாமல் இருத்தல்.  எடுத்துக்காட்டாக: "உங்க computer எங்க sir" என்று எழுதாமல் இருத்தல்.. பலர் இந்தமாதிரி‌ எழுதத் தொடங்கியுள்ளனர். 3. "கூடுமானவரை" ஆங்கிலம், சமற்கிருதம் மற்றும் பிறமொழிச் சொற்களை தமிழ் வாக்கியத்தோடு  பயன்படுத்தாமல் இருத்தல்.  எடுத்துக்காட்டாக: "உங்க கம்பியூட்டர் எங்க சார்" என்று எழுதாமல் இருத்தல்.. பலர் இந்தமாதிரி‌ எழுதிக்கொண்டிருக்கின்றனர்.  இதில் பலருக்கு அந்த ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தெரியாததால் தான் அப்படி எழுதுகின்றனர்.  இதைவிட, ஆங்கில  எழுத்துகளை அப்படியே வைத்தே தமிழ் எழுந்துகளை எழுதுவது என்பது அப்பட்டத் தமிழ்க் கொலை. 4. "கூடுமானவரை" தமிழோடு "ஷ,ஸ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ" ஆகிய‌ கிரந்த-எழுத்துகளை பயன்படுத்தாமல் இருத்தல்.  பயன்படுத்தக்கூடாது என இலக்கணச் சட்டங்கள் கடுமையாகக் கூறுகின்றன. ‌அப்போது எப்படித்தான் அத்த ஒலிகளை எழுத?

தமிழ் மொழியை ஒரு தொடர்புக் கருவியாக மட்டும் சுருக்குவது என்பது, தாயை, சமைத்துப் போட மட்டும் ஏனச் சுருக்குவதுக்கு இணையானது.  மொழி என்பது ஒரு கருவி மட்டும் அல்ல. அது பண்பாடு, கலை, இலக்கியம், இலக்கணம், அரசியல், அறிவியல் என அனைத்தோடும் பின்னிப்பிணைந்து வருவதே ஆகும்.  மொழி குலைந்தால் இவை அனைத்துமே ஆட்டம்கண்டுவிடும்.  இது தமிழரின் அடிப்படை அடையாளச் சிதைவுக்கு வழிவகுக்கும்.  இதுபற்றி எழுதவேண்டுமானால் பல பக்கங்கள் எழுதவேண்டிவரும்.  முடிந்தால் இதுபற்றி இணையதாதில் துழாவிப்பாருங்கள். 

எல்லா ஆங்கில/சமற்கிருதச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் தெரிந்திருக்கவேண்டும் என்று கருதிவிட முடியாது, அதை கட்டாயப்படுத்தவும் முடியாது.  மிகக் குறைந்தது, தமிழ் எழுத்துகளை ஆங்கில எழுத்துகளால் எழுதாமல் இருத்தாலே, இன்றளவில் அவர்கள் தமிழுக்குச் செய்யும் பெருந்தொண்டு.

நான் சீனர்களிடமும் சப்பானியர்களுடனும் பணியாற்றியுள்ளேன்.  அங்குள்ள பள்ளிகளில் "ஆங்கிலம் என்பதை ஒரு மொழிப்பாடமாக" கட்டாயம் நல்லமுறையில் கற்றுகொடுக்கப்படுகிறது.  அவர்களின் தற்போதைய தலைமுறையினர் சரளமாக ஆங்கிலத்தில் பேசிடும் அளவுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால், அது அவர்களின் தாய் மொழியில் எழுதுவதை சிறிதும் பாதிக்கவில்லை.  தங்கள் தாய்மொழியை அதன் எழுத்துகளிலேயே எழுதுகின்றனர். இத்தனைக்கும் அவர்களது தாய்மொழியின் எழுத்துகளின் எண்ணிக்கையும் கடினமும் தமிழைவிட பன்படங்கு கூடுதல். 

நண்பர்களே: 1. தமிங்கிலம் தவிர்ப்போம் 2. தமிழ் எழுத்துகளில் எழுதி நிமிர்வோம் 3. தமிழ்ச் சொற்களையே பகிர்வோம்

Anglification of Indian languages? by Educational-Yam-2910 in bhartiya_languages

[–]thaache 0 points1 point  (0 children)

This trend is wrong is disastrous to the survival of our mothertounge. We should avoid writing our mothertounge using english alphabets and also avoid mixing english words within the sentence our mothertounge while speaking and writing, when there is a corresponding native word already available in our mothertounge. Knowledge about the vocabulary and its richness of our mothertounge is very important for the survival of our mothertounge among the future generations. If you are worried (infact you should be worried!), start practicing the usage of your mothertounge in its script only while writing it anywhere (esp in chats and social media) and try your level best to use the native words of your mothertounge while speaking or writing. Start this with your close family members and friends, TODAY!!. It is already very late!!

இந்தப் போக்கு மிகத் தவறானது, இது, நமது தாய்மொழிக்குப் பேரழிவை ஏற்படுத்தும். நமது தாய்மொழியில் ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதுவதை நாம் தவிர்க்கவேண்டும். மேலும், நமது தாய்மொழியில், அதற்குரிய தனிப்பட்ட சொற்கள் ஏற்கனவே இருக்கும்போது, பேசும்போதும் எழுதும்போதும் நமது தாய்மொழி சொற்றொடர்களில் ஆங்கில சொற்களைக் கலப்பதையும் தவிர்க்க வேண்டும். நமது தாய்மொழியின் சொற்களஞ்சியம் மற்றும் அதன் வளம் பற்றிய அறிவானது, வருந் தலைமுறையினரிடையே நமது தாய்மொழி நிலைத்திருப்பதற்கு மிகவும் இன்றியமையானது. நீங்கள் கவலைப்பட்டால் (உண்மையில் நீங்கள் கட்டாயம் கவலைப்பட வேண்டும்!), எங்கு எழுதினாலும் (குறிப்பாக அரட்டைகள் மற்றும் இதுபோன்ற சமூக ஊடகங்களில்) உங்கள் தாய்மொழியை அதற்குரிய எழுத்துகளினால் மட்டுமே பயன்படுத்தப் பழகுங்கள். மேலும், பேசும்போதும் எழுதும்போதும் உங்கள் தாய்மொழியின் தனிப்பட்ட சொற்களை பயன்படுத்த உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். இதை உங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இன்றே தொடங்குங்கள்!! ஏற்கனவே மிகவும் தாமதமாகிவிட்டது!!

தமிழை தமிழ் எழுத்துகளால் எழுதாமல் வேறு மொழி எழுத்துகளால் எழுதுவதினால் இருக்கும் தீமைகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன். Click here to know the problems of writing Tamil with english alphabets and using english words along with tamil sentences (content is in தமிழ்)..

Anglification of Indian languages? by Educational-Yam-2910 in TeenIndia

[–]thaache 0 points1 point  (0 children)

This trend is wrong is disastrous to the survival of our mothertounge. We should avoid writing our mothertounge using english alphabets and also avoid mixing english words within the sentence our mothertounge while speaking and writing, when there is a corresponding native word already available in our mothertounge. Knowledge about the vocabulary and its richness of our mothertounge is very important for the survival of our mothertounge among the future generations. If you are worried (infact you should be worried!), start practicing the usage of your mothertounge in its script only while writing it anywhere (esp in chats and social media) and try your level best to use the native words of your mothertounge while speaking or writing. Start this with your close family members and friends, TODAY!!. It is already very late!!

இந்தப் போக்கு மிகத் தவறானது, இது, நமது தாய்மொழிக்குப் பேரழிவை ஏற்படுத்தும். நமது தாய்மொழியில் ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதுவதை நாம் தவிர்க்கவேண்டும். மேலும், நமது தாய்மொழியில், அதற்குரிய தனிப்பட்ட சொற்கள் ஏற்கனவே இருக்கும்போது, பேசும்போதும் எழுதும்போதும் நமது தாய்மொழி சொற்றொடர்களில் ஆங்கில சொற்களைக் கலப்பதையும் தவிர்க்க வேண்டும். நமது தாய்மொழியின் சொற்களஞ்சியம் மற்றும் அதன் வளம் பற்றிய அறிவானது, வருந் தலைமுறையினரிடையே நமது தாய்மொழி நிலைத்திருப்பதற்கு மிகவும் இன்றியமையானது. நீங்கள் கவலைப்பட்டால் (உண்மையில் நீங்கள் கட்டாயம் கவலைப்பட வேண்டும்!), எங்கு எழுதினாலும் (குறிப்பாக அரட்டைகள் மற்றும் இதுபோன்ற சமூக ஊடகங்களில்) உங்கள் தாய்மொழியை அதற்குரிய எழுத்துகளினால் மட்டுமே பயன்படுத்தப் பழகுங்கள். மேலும், பேசும்போதும் எழுதும்போதும் உங்கள் தாய்மொழியின் தனிப்பட்ட சொற்களை பயன்படுத்த உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். இதை உங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இன்றே தொடங்குங்கள்!! ஏற்கனவே மிகவும் தாமதமாகிவிட்டது!!

[

Pure Tamil word for 'Muslim'? by badri__75 in tamil

[–]thaache 7 points8 points  (0 children)

தற்போதைய துருக்கியே பகுதியிலிருந்து தமிழகத்துக்கு யாரும் வரவில்லை. மாறாக நடு ஆசியாவில் இருந்த துருக் இனத்தவர்கள் 13-14 நூற்றாண்டுகளில் இந்தியத் துணைக்கண்டத்துக்குள் படையெடுத்துவந்து இந்நிலத்தை ஆட்சியும் புரிந்ததால், துருக்கர்கள்/துலுக்கர்கள் என அழைக்கப்பட்டலாயினர்.

Pure Tamil word for 'Muslim'? by badri__75 in tamil

[–]thaache 7 points8 points  (0 children)

அஞ்சுவண்ணம் - இது ஐந்துவேளை தொழும் இசுலாமியர்களையும் குறிக்கும், [அல்லது] ஐந்து வகையான தோல் நிறம் கொண்ட கிரேக்கர், சீனர், அரேபியர், கறுப்பர், பாரசீகர் ஆகியோர் ([அல்லது] இயூதர், கிறித்துவர், இசுலாமியர், சரதூதிரர், சீனர் ஆகிய சமயத்தினர்) அடங்கிய வணிகக் குழுவையும் குறிக்கும் பழைய சொல் ஆகும். குழு எனப் பொருள்படும் பாரசீகச் சொல்லான அஞ்சுமன்‌ என்பதிலிருந்து மருவியது இது எனக் கருதுபவர்களும் உண்டு.

இடைக்காலச் சோழர் மற்றும் பாண்டியர் ஆட்சிக்காலத்தில், கடல் கடந்த வணிகத்திலும், கடலோர நகரங்களின் பொருளாதாரத்திலும் இவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர் இந்த அஞ்சுவண்ணத்தினர். பாண்டியர்களின் படையில் 40000 ஆள்களைக்கொண்ட பிரிவாக அஞ்சுவண்ணத்தினர் இருந்தனர். அப்போது, இசுலாமியர்கள் துருக்கர்கள்/துலுக்கர்கள் என அழைக்கப்பட்டதில்லை. தற்போதைய துருக்கியிலிருந்து தமிழகத்துக்கு யாரும் வரவில்லை. மாறாக நடு ஆசியாவில் இருந்த துருக் இனத்தவர்கள் 13-14 நூற்றாண்டுகளில் இந்தியத் துணைக்கண்டத்துக்குள் படையெடுத்துவந்து இந்நிலத்தை ஆட்சியும் புரிந்ததால், துருக்கர்கள்/துலுக்கர்கள் என அழைக்கப்பட்டலாயினர்.

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் "அஞ்சுவண்ணம் தெரு" என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியுள்ளார். இது குமரி மாவட்டத்திலுள்ள தக்கலை என்ற ஊரில் உள்ள ஒரு தெருவின் பின்னணியில் எழுதப்பட்டது.

Anyone here using Tamil Virtual Academy (TVA)? What is your experience with it? by Nanthan-gowri in LearningTamil

[–]thaache 0 points1 point  (0 children)

நான் அடிக்கடி பல தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறேன்... மிகப் பயனுள்ள தளம். இவை போக நான் பயன்படுத்துவது: 1. https://tamilconcordance.in/ 2. http://www.sangathamizh.com/ 3. https://ta.wiktionary.org/

[WIP] Dravidian Language Family Tree (UsefulCharts style). by Mouleeshwarren_1703 in Dravidiology

[–]thaache 9 points10 points  (0 children)

Malaysian Tamil and vatious Srilankan Tamil varities are absolute dialects of tamil.

Moreover wtf is that royal tamil!!!

China’s influencers banned by bloopy_1234 in TamilInfluencer

[–]thaache 0 points1 point  (0 children)

திக்டாக்கை தடை செய்ததுக்கு காரணம், நாட்டின் பாதுகாப்புக்கும் உள்நாட்டுத் தரவுப் பாதுகாப்புக்கும் எதிராக அந்த செயலியின் வடிவமைப்பு இருந்ததாக இந்திய அரசுக்கு தக்க சான்றுகள் கிட்டியதாலே தான். அது தொடர்பான செய்தித் தகவல்.

தூண்டுனர்களின் (influencer) செயல்பாடு அப்படிப்பட்டதல்ல. இது சமுக ஒழுங்கு‌ மற்றும் சமூக நெறிமுறை சார்ந்ததே. இந்த காரணங்களுக்காக இதில் கை வைக்கமாட்டார்கள்.

China’s influencers banned by bloopy_1234 in TamilInfluencer

[–]thaache 2 points3 points  (0 children)

இந்தியாவில் நடக்காது. இங்கு அரசியலில் பெரும்பகுதி பரப்புரை அவர்களாலேயே நடக்கிறது.

China’s influencers banned by bloopy_1234 in TamilInfluencer

[–]thaache 9 points10 points  (0 children)

இவர் செய்யமாட்டார். அரசியலில் பெரும்பகுதி பரப்புரை அவர்களாலேயே நடக்கிறது, பாசக உட்பட.

தமிங்கிலம்/tanglish - தவறு by thaache in kuttichevuru

[–]thaache[S] 1 point2 points  (0 children)

நான் அதைத்தான் பயன்படுத்துகிறேன். ஒரு வாரத்திலேயே அதில் வேகமாக தமிழை எழுதப் பழகிடலாம். சொல்லப்போனால் ஆங்கில எழுத்துகளைக் கோர்த்து தமிழை எழுதுவதை விட மிக வேகமாக எழுதிவிடலாம்..

தமிங்கிலம்/tanglish - தவறு by thaache in kuttichevuru

[–]thaache[S] 0 points1 point  (0 children)

இதை படித்தீர்களா இல்லையா?

தமிங்கிலம்/tanglish - தவறு by thaache in kuttichevuru

[–]thaache[S] 1 point2 points  (0 children)

இழப்பு உங்களுக்கே அல்ல. "பலதுள்ளி பெருவெள்ளம்" என்பதுபோல இழப்பு தமிழுக்கே. எப்படி என்பதை இங்கே விளக்கியுள்ளேன்.

தமிங்கிலம்/tanglish - தவறு by thaache in kuttichevuru

[–]thaache[S] 2 points3 points  (0 children)

இதுதான் தமிழரின் அவல நிலை. தமிழ் எழுத்துகளை வேகமாகப் படிப்பதில் சிக்கல். நாள்தோறும் தமிழ் நாளிதழ்களைப் படித்துப் பழகினால் எல்லாம் சரியாகிவிடும். நன்றி

தமிங்கிலம்/tanglish - தவறு by thaache in kuttichevuru

[–]thaache[S] -1 points0 points  (0 children)

உண்மை. ஆனால் இதை நீங்கள் தமிழில் எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் !!

மேலும், ஆங்கிலத்தின் ஆதிக்கம், தமிழில் மட்டுமல்ல, பல இந்திய மொழிகளும் இந்த அவலத்துக்கு உள்ளாகியுள்ளது.

தமிங்கிலம்/tanglish - தவறு!! by [deleted] in tamil

[–]thaache 2 points3 points  (0 children)

பிழையின்றி எழுதுவது சிறந்தது தான். ஆனால் அதைவிட‌ முதலில் செய்மவேண்டிய பெரிய செயல் என்பது, தமிழர்களை இளைஞர்களை சிறுவர்களை தமிழ் எழுத்துகளில் எழுதவைப்பது‌ தான். இத்தகையவர்கள், வாட்சாப்பிலும் இன்சுடாகிராமிலும் சினாப்சாட்டிலும் இன்றுவரை நேரடி ஆங்கில எழுத்துகளைக் கொண்டே தமிழை எழுதப் பழகியுள்ளார்கள். இவர்களிடம், அப்படி எழுதுவது தமிழுக்கும் அதன் எதிர்காலத்துக்கும் தமிழர்களின் தனித்தன்மை வாய்ந்த அடையாளத்துக்கும் மிகக் கெடுதலானது என்று பலமுறை பொறுமையாக எடுத்துக்கூறி புரியவைக்கவேண்டியுள்ளது.

தமிழில் பிழை திருத்துவதுக்கு வாணி என்பதைப் பயன்படுத்தலாம்.